அன்-நுஃமான் பின் பஷீர் (ரழி) அறிவித்தார்கள்:
அவர்களுடைய தந்தை அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "நான் என்னுடைய இந்த மகனுக்கு ஓர் அடிமையை வழங்கியுள்ளேன்" என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் உங்களுடைய எல்லா மகன்களுக்கும் இது போன்றே வழங்கியுள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அவர் இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் உங்களுடைய அன்பளிப்பை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.