தனது தர்மத்தை (பிறருக்குக் கொடுத்தபின்) திரும்பப் பெறுபவர், வாந்தியெடுத்துவிட்டு, பின்னர் தனது வாந்தியிடமே திரும்பிச் சென்று அதை உண்ணும் நாயைப் போன்றவர் ஆவார்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டேன்: தர்மம் செய்துவிட்டு, பின்னர் தனது தர்மத்தை (திரும்பப்) பெற்றுக்கொள்பவனின் உதாரணம், வாந்தியெடுத்துவிட்டு, பின்னர் தனது வாந்தியை உண்ணும் நாயின் உதாரணத்தைப் போன்றதாகும்.