இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''உம்ரா' மற்றும் 'ருக்பா' என்பவை (இஸ்லாத்தில்) இல்லை. யாரேனும் ஒருவருக்கு 'உம்ரா' அல்லது 'ருக்பா' அடிப்படையில் ஏதேனும் வழங்கப்பட்டால், அது அவருடைய வாழ்நாளிலும் அவர் இறந்த பின்னரும் அவருக்கே உரியதாகும்."
அதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ''அது மற்றவருக்குரியது.''