أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عِيسَى، وَعَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، قَالَ حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ مَنْ أُعْمِرَ شَيْئًا فَهُوَ لَهُ .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ஒருவருக்கு (ஒரு பொருள்) ஆயுள் காலப் பயன்பாட்டிற்காக வழங்கப்படுகிறதோ, அது அவருக்கே (முழுச் சொந்தமாகிவிடும், அவரது மரணத்திற்குப் பிறகும் அவரது வாரிசுகளுக்கும் உரியதாகும்).”