இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1620ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ طَاوُسًا، أَخْبَرَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم مَرَّ وَهُوَ يَطُوفُ بِالْكَعْبَةِ بِإِنْسَانٍ رَبَطَ يَدَهُ إِلَى إِنْسَانٍ بِسَيْرٍ، أَوْ بِخَيْطٍ، أَوْ بِشَىْءٍ غَيْرِ ذَلِكَ، فَقَطَعَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ، ثُمَّ قَالَ ‏ ‏ قُدْهُ بِيَدِهِ ‏ ‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கஃபாவைத் தவாஃப் செய்துகொண்டிருந்தபோது, (ஒருவர்) தனது கையை மற்றொரு மனிதருடன் வார், அல்லது நூல் அல்லது வேறு ஏதேனும் ஒன்றால் கட்டியிருந்த ஒருவரைக் கடந்து சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது கையால் துண்டித்துவிட்டு, (கட்டப்பட்டிருந்தவரை,) 'அவரை (அவரது) கையைப் பிடித்து அழைத்துச் செல்லுங்கள்' என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح