ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது மனைவியரிடையே (தமது நேரத்தை) சமமாகப் பங்கிட்டு வந்தார்கள். பிறகு, "அல்லாஹும்ம ஹாதா ஃபிஅலீ ஃபீமா அம்லிக்கு; ஃபாலா தலூம்னீ ஃபீமா தம்லிக்கு வலா அம்லிக்கு" (யா அல்லாஹ்! இது என் கட்டுப்பாட்டில் உள்ள விஷயத்தில் நான் செய்யும் பங்கீடாகும். ஆகவே, உன் கட்டுப்பாட்டில் உள்ளதும், என் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதுமான விஷயத்திற்காக என்னைக் குற்றம் பிடித்துவிடாதே!) என்று கூறுவார்கள்.