حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو قِلاَبَةَ الْجَرْمِيُّ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم نَفَرٌ مِنْ عُكْلٍ، فَأَسْلَمُوا فَاجْتَوَوُا الْمَدِينَةَ، فَأَمَرَهُمْ أَنْ يَأْتُوا إِبِلَ الصَّدَقَةِ، فَيَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا، فَفَعَلُوا فَصَحُّوا، فَارْتَدُّوا وَقَتَلُوا رُعَاتَهَا وَاسْتَاقُوا، فَبَعَثَ فِي آثَارِهِمْ فَأُتِيَ بِهِمْ، فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسَمَلَ أَعْيُنَهُمْ، ثُمَّ لَمْ يَحْسِمْهُمْ حَتَّى مَاتُوا.
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
உக்ல் கோத்திரத்தைச் சேர்ந்த சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இஸ்லாத்தைத் தழுவினார்கள். மதீனாவின் காலநிலை அவர்களுக்கு ஒவ்வாததால், தர்ம ஒட்டகங்களின் மந்தைக்குச் சென்று, அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அவர்கள் அவ்வாறே செய்து (உடல் தேறி) ஆரோக்கியமடைந்தனர். (பிறகு) அவர்கள் இஸ்லாத்திலிருந்து வெளியேறி, ஒட்டகங்களின் மேய்ப்பர்களைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றார்கள். உடனே, அவர்களைத் தேடிச் செல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் (ஆட்களை) அனுப்பினார்கள்; அவர்கள் கொண்டுவரப்பட்டார்கள். அவர்களது கைகளையும் கால்களையும் துண்டிக்குமாறும், அவர்களது கண்களைக் குருடாக்குமாறும் (சூடான இரும்பால் குத்தி) நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். பிறகு அவர்கள் இறக்கும் வரை (இரத்தப்போக்கை நிறுத்த) அவர்களுக்குச் சூடு போடப்படவில்லை.