அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நிச்சயமாக இமாம் (தலைவர்) ஒரு கேடயம் ஆவார். அவருக்குப் பின்னால் இருந்தே போர் செய்யப்படும்; அவர் மூலமாகவே பாதுகாப்புப் பெறப்படும். அவர் உயர்ந்தோனும் மகிமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுவதைக் கட்டளையிட்டு, நீதியுடன் நடந்து கொண்டால், அதனால் அவருக்கு நற்கூலி உண்டு. அவர் இதற்கு மாற்றமாக (வேறொன்றைக்) கட்டளையிட்டால், அதன் தீமை அவரையே சாரும்."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ الْبَزَّازُ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ بِهِ .
அபூஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்தார்கள்: “நிச்சயமாக இமாம் (தலைவர்) ஒரு கேடயம் ஆவார்; அவரைக் கொண்டே (அவரது தலைமையில் அல்லது பாதுகாப்பில்) போரிடப்படும்.”