இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6686ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنْ سَوْدَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ مَاتَتْ لَنَا شَاةٌ فَدَبَغْنَا مَسْكَهَا ثُمَّ مَا زِلْنَا نَنْبِذُ فِيهِ حَتَّى صَارَتْ شَنًّا‏.‏
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸவ்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
எங்களுடைய ஆடு ஒன்று இறந்துவிட்டது. அதன் தோலை நாங்கள் பதனிட்டோம். பிறகு அது பழைய நீர்ப்பையாகும் வரை அதில் நாங்கள் பேரீச்சம்பழங்களை (பானம் தயாரிக்க) ஊறவைத்துக் கொண்டிருந்தோம்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح