அபூ தர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான்: எதைக் கொடுத்தாலும் அதைச் சொல்லிக் காட்டாமல் இருக்காத கொடையாளி, பொய் சத்தியம் செய்து தனது பொருட்களை விற்பனை செய்பவர், மற்றும் தனது கீழாடையைக் கணுக்காலுக்குக் கீழே இறக்கிக் கட்டியவர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று நபர்களுடன் மறுமை நாளில் அல்லாஹ் பேசமாட்டான், அவர்களைப் பார்க்கவும் மாட்டான், அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மேலும் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு: கொடுத்ததைச் சொல்லிக் காட்டுபவர், தனது ஆடையைக் கணுக்கால்களுக்குக் கீழே தொங்க விடுபவர், மற்றும் பொய்ச் சத்தியம் செய்து தனது பொருளை விற்கும் வியாபாரி."