حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ التَّلَقِّي، وَأَنْ يَبْتَاعَ الْمُهَاجِرُ لِلأَعْرَابِيِّ، وَأَنْ تَشْتَرِطَ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا، وَأَنْ يَسْتَامَ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ، وَنَهَى عَنِ النَّجْشِ، وَعَنِ التَّصْرِيَةِ. تَابَعَهُ مُعَاذٌ وَعَبْدُ الصَّمَدِ عَنْ شُعْبَةَ. وَقَالَ غُنْدَرٌ وَعَبْدُ الرَّحْمَنِ نُهِيَ. وَقَالَ آدَمُ نُهِينَا. وَقَالَ النَّضْرُ وَحَجَّاجُ بْنُ مِنْهَالٍ نَهَى.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (1) வணிகக் குழுவினர் (சந்தைக்கு வரும்) வழியில் அவர்களை எதிர்கொள்வதையும், (2) நகரவாசி கிராமவாசிக்காக (அவரது பொருளை) விற்பனை செய்வதையும், (3) ஒரு பெண், (தான் ஒருவரைத்) திருமணம் புரிந்துகொள்வதற்காக அவருடைய (தற்போதைய) மனைவியை விவாகரத்துச் செய்யுமாறு நிபந்தனையிடுவதையும், (4) ஒருவர் மற்றவர் பேசி முடித்த வியாபாரத்தைக் கலைக்க முயல்வதையும் தடை செய்தார்கள். மேலும், அவர்கள் அந்-நஜ்ஷ் (ஹதீஸ் 824 பார்க்கவும்) என்பதையும், ஒருவர் ஒரு பிராணியை விற்கும்போது மக்களை ஏமாற்றுவதற்காக அதன் மடியிலுள்ள பாலைக் (கறக்காமல்) தேக்கி வைப்பதையும் தடை செய்தார்கள்.
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வணிகக் குழுவினரை (அவர்களுடன் வணிகப் பரிவர்த்தனை செய்வதற்காக) இடைமறித்துச் சந்திப்பதையும், நகரவாசி ஒருவர் கிராமவாசி ஒருவருக்காக (அவரது பொருளை) விற்பனை செய்வதையும், ஒரு பெண் தன் சகோதரியின் விவாகரத்தைக் கோருவதையும், (ஒருவருக்கொருவர்) போட்டி போட்டு விலை ஏற்றிவிடுவதையும் (நஜ்ஷ்), (விலங்குகளின்) மடுக்களைக் கட்டி வைப்பதையும் (தஸ்ரியா), தன் சகோதரன் ஒரு பொருளுக்கு விலை பேசிக் கொண்டிருக்கும்போது (குறுக்கிட்டு அதே பொருளை) வாங்குவதையும் தடுத்தார்கள்.