حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ الْمُتَبَايِعَانِ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا بِالْخِيَارِ عَلَى صَاحِبِهِ مَا لَمْ يَفْتَرِقَا إِلاَّ بَيْعَ الْخِيَارِ .
அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வியாபாரத்தில் ஈடுபடும் இரு தரப்பினரில் ஒவ்வொருவருக்கும், அவர்கள் பிரியாத வரை மற்றவருடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை உண்டு; நிபந்தனையுடன் கூடிய வியாபாரத்தைத் தவிர.