حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَبْتَاعُونَ الطَّعَامَ فِي أَعْلَى السُّوقِ فَيَبِيعُونَهُ فِي مَكَانِهِمْ، فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ.
அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கள் சந்தையின் மேற்பகுதியில் உணவுப் பொருட்களை வாங்கி, அங்கேயே அவற்றை விற்று வந்தார்கள். ஆகவே, அவற்றை (வேறிடத்திற்கு) எடுத்துச் செல்லும் வரை அவ்விடத்திலேயே விற்கக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களுக்குத் தடை விதித்தார்கள்.
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَنَامُ وَهُوَ شَابٌّ عَزْبٌ لاَ أَهْلَ لَهُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي مَسْجِدِ النَّبِيِّ صلى الله عليه وسلم .
இப்னு உமர் (ரழி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டதாவது: அவர்கள் இளைஞராகவும், குடும்பமில்லாத தனி நபராகவும் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், நபி (ஸல்) அவர்களின் பள்ளிவாசலில் உறங்குபவர்களாக இருந்தார்கள்.