இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

715 mஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، حَدَّثَنِي جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّهُ كَانَ يَسِيرُ عَلَى جَمَلٍ لَهُ قَدْ أَعْيَا فَأَرَادَ أَنْ يُسَيِّبَهُ قَالَ فَلَحِقَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَعَا لِي وَضَرَبَهُ فَسَارَ سَيْرًا لَمْ يَسِرْ مِثْلَهُ قَالَ ‏"‏ بِعْنِيهِ بِوُقِيَّةٍ ‏"‏ ‏.‏ قُلْتُ لاَ ‏.‏ ثُمَّ قَالَ ‏"‏ بِعْنِيهِ ‏"‏ ‏.‏ فَبِعْتُهُ بِوُقِيَّةٍ وَاسْتَثْنَيْتُ عَلَيْهِ حُمْلاَنَهُ إِلَى أَهْلِي فَلَمَّا بَلَغْتُ أَتَيْتُهُ بِالْجَمَلِ فَنَقَدَنِي ثَمَنَهُ ثُمَّ رَجَعْتُ فَأَرْسَلَ فِي أَثَرِي فَقَالَ ‏"‏ أَتُرَانِي مَاكَسْتُكَ لآخُذَ جَمَلَكَ خُذْ جَمَلَكَ وَدَرَاهِمَكَ فَهُوَ لَكَ ‏"‏ ‏.‏
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நான் களைத்துப்போயிருந்த எனது ஒட்டகத்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். எனவே, அதை (வழியில்) விட்டுவிட நான் நாடினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். எனக்காகப் பிரார்த்தனை செய்து அதைத் தட்டினார்கள். அது இதற்கு முன் ஒருபோதும் சென்றிராதவாறு (வேகமாகச்) சென்றது.

அவர்கள், "இதை எனக்கு ஒரு ஊகிய்யாவிற்கு விற்றுவிடு" என்றார்கள். நான் "இல்லை" என்றேன். பிறகு அவர்கள், "இதை எனக்கு விற்றுவிடு" என்றார்கள். எனவே, எனது குடும்பத்தினரிடம் (ஊர் போய்ச்) சேரும் வரை சவாரி செய்துகொள்ளும் நிபந்தனையின் பேரில் அதை அவர்களுக்கு ஒரு ஊகிய்யாவிற்கு விற்றேன்.

நான் (ஊர்) போய்ச் சேர்ந்ததும் ஒட்டகத்தை அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் எனக்கு அதன் விலையை ரொக்கமாகக் கொடுத்தார்கள். பிறகு நான் திரும்பினேன். அவர்கள் எனக்குப் பின்னால் ஆளனுப்பி (என்னை அழைத்து), "உனது ஒட்டகத்தை எடுத்துக்கொள்வதற்காக நான் உன்னிடம் பேரம் பேசினேன் என்று நீ நினைக்கிறாயா? உனது ஒட்டகத்தையும் உனது திர்ஹம்களையும் எடுத்துக்கொள்; இவை உனக்கே உரியன" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح