"அண்டை வீட்டார்களாக இருந்த இரண்டு பெண்களுக்கிடையே சச்சரவு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் மற்றவர் மீது கல்லை எறிந்தார். அதனால் அந்தப் பெண்ணுக்குக் கரு கலைந்து, (கல்லடிபட்டதால்) ஏற்கனவே முடி வளர்ந்திருந்த ஓர் ஆண் குழந்தை இறந்து பிறந்தது. (பிறகு) அந்தப் பெண்ணும் இறந்து போனார். (அப்பெண்ணின் மரணத்திற்காக) கொலை செய்த பெண்ணின் தந்தை வழி உறவினர்கள் (ஆக்கிலா) முழு தியத் (நஷ்டஈடு) செலுத்த வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.
அப்போது (இறந்த) அப்பெண்ணின் தந்தை வழி மாமா, 'அல்லாஹ்வின் தூதரே! முடி வளர்ந்திருந்த ஓர் ஆண் குழந்தையை அவள் கருக்கலைத்துவிட்டாள்' என்று கூறினார்.
அதற்கு கொலையாளியின் தந்தை, 'இவர் பொய் சொல்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அது (பிறந்த நேரத்தில்) சப்தமிடவில்லை (அழவில்லை), அருந்தவில்லை, உண்ணவில்லை. இது போன்ற ஒன்றுக்கு நஷ்டஈடு கிடையாது' என்று கூறினார்.
(அவர் எதுகை மோனையுடன் கூறியதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், 'அறியாமைக் காலத்து ஜோதிடர்களின் எதுகை மோனைப் பேச்சைப் போன்று உள்ளதே! அந்தச் சிசுவிற்கு (நஷ்டஈடாக) ஓர் ஆண் அல்லது பெண் அடிமையை (குர்ரா) அளிக்க வேண்டும்' என்று கூறினார்கள்."
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: "அவர்களில் ஒருவர் முலைக்கா; மற்றவர் உம்மு ஃகதீஃப் ஆவர்."
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ لاَ يُقْتَلُ مُؤْمِنٌ بِكَافِرٍ وَلاَ ذُو عَهْدٍ فِي عَهْدِهِ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு நிராகரிப்பாளரைக் கொன்றதற்காக ஒரு நம்பிக்கையாளர் பழிக்குப் பழியாகக் கொல்லப்படக்கூடாது. மேலும், உடன்படிக்கை செய்தவர் (முஸ்லிம் ஆட்சியின் கீழ் பாதுகாப்புடன் வாழும் முஸ்லிமல்லாதவர்) அவரது உடன்படிக்கைக் காலத்தில் (அவர் பாதுகாப்புடன் வாழும் காலத்தில்) கொல்லப்படக்கூடாது.”