ஸஃப்வான் பின் யஃலா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
யஃலா பின் முனய்யா (ரலி) அவர்களின் கூலியாளி ஒருவரின் முன்கையை ஒரு மனிதர் கடித்துவிட்டான். அவர் (கூலியாளி) தன் கையை இழுத்ததும், (கடித்த) அம்மனிதரின் முன் பல் விழுந்துவிட்டது. இவ்விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் அதை (பல்லுக்கான நஷ்ட ஈட்டுக் கோரிக்கையை) ரத்துச் செய்துவிட்டு, "ஆண் ஒட்டகம் கடிப்பது போல் நீ (அவனது கையை பலமாக) கடிக்கவா எண்ணினாய்?" என்று கேட்டார்கள்.
حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى ابْنِ، مُنْيَةَ عَنْ أَبِيهِ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ وَقَدْ عَضَّ يَدَ رَجُلٍ فَانْتَزَعَ يَدَهُ فَسَقَطَتْ ثَنِيَّتَاهُ - يَعْنِي الَّذِي عَضَّهُ - قَالَ فَأَبْطَلَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَقَالَ أَرَدْتَ أَنْ تَقْضَمَهُ كَمَا يَقْضَمُ الْفَحْلُ .
யஃலா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்தார். அவர் மற்றொருவரின் கையைக் கடித்திருந்தார். கடிக்கப்பட்டவர் தனது கையை இழுத்துக்கொண்டார். அதனால் கடித்தவரின் முன் பற்கள் விழுந்துவிட்டன. அப்பற்களுக்கு (விழுந்ததற்காக) நஷ்டஈடு கோரும் உரிமையை நபி (ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். மேலும், "ஆண் ஒட்டகம் கடிப்பது போல நீ கடிக்க விரும்பினாயா?" என்று கேட்டார்கள்.