حَدَّثَنَا أَحْمَدُ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ أَعْلَى مَكَّةَ. قَالَ هِشَامٌ وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ عَلَى كِلْتَيْهِمَا مِنْ كَدَاءٍ وَكُدًا، وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ، وَكَانَتْ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ.
ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
மக்கா வெற்றியின் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் மக்காவின் உயரமான பகுதியிலுள்ள கதாஃ என்ற இடத்திலிருந்து மக்காவிற்குள் நுழைந்தார்கள். (ஹிஷாம் என்ற ஒரு துணை அறிவிப்பாளர் கூறினார்கள், “`உர்வா அவர்கள் கதாஃ மற்றும் குதா ஆகிய இரண்டின் வழியாகவும் (மக்காவிற்குள்) நுழைபவராக இருந்தார்கள்; மேலும் அவர் தமது வசிப்பிடத்திற்கு அருகிலிருந்த கதாஃ வழியாகவே அடிக்கடி நுழைவார்கள்.”)"
حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ. وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ مِنْهُمَا كِلَيْهِمَا وَأَكْثَرُ مَا يَدْخُلُ مِنْ كَدَاءٍ أَقْرَبِهِمَا إِلَى مَنْزِلِهِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَدَاءٌ وَكُدًا مَوْضِعَانِ.
ஹிஷாம் அவர்கள் தம் தந்தையிடமிருந்து அறிவித்தார்கள்:
மக்கா வெற்றியின் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் கதா எனும் பகுதியிலிருந்து மக்காவிற்குள் நுழைந்தார்கள். உர்வா அவர்கள் இவ்விரு இடங்கள் வழியாகவும் நுழைவார்கள்; மேலும் அன்னார் அடிக்கடி கதா' வழியாக நுழைவார்கள், இவ்விரண்டில் அதுவே அன்னாரின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் இருந்தது.
حَدَّثَنَا هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، - رضى الله عنها - قَالَتْ دَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءَ مِنْ أَعْلَى مَكَّةَ وَدَخَلَ فِي الْعُمْرَةِ مِنْ كُدًى قَالَ وَكَانَ عُرْوَةُ يَدْخُلُ مِنْهُمَا جَمِيعًا وَكَانَ أَكْثَرُ مَا كَانَ يَدْخُلُ مِنْ كُدًى وَكَانَ أَقْرَبَهُمَا إِلَى مَنْزِلِهِ .
ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: (மக்கா) வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவின் மேல்பகுதியான குதா எனும் பகுதியிலிருந்து மக்காவில் நுழைந்தார்கள். உம்ரா செய்தபோது கிதா எனும் பகுதியிலிருந்து நுழைந்தார்கள்.
உர்வா (ரழி) அவர்கள் (மக்காவிற்குள்) இவ்விரு வழிகளாலும் நுழைவார்கள். ஆனால், அது அவர்களுடைய வீட்டிற்கு அருகில் இருந்ததால், பெரும்பாலும் குதா எனும் பகுதியிலிருந்தே நுழைவார்கள்.