حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ ، يَعْنِي الْخِنْصَرَ وَالإِبْهَامَ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள், "இதுவும் இதுவும் (ஈட்டுத்தொகையின் அடிப்படையில்) சமமானவை" என்று கூறினார்கள். அவர்கள் இதன் மூலம் சுண்டு விரலையும் பெருவிரலையும்தான் குறிப்பிட்டார்கள்.
யஃலா பின் முன்யா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அவர் ஒரு மனிதருடன் சண்டையிட்டார். அவர்களில் ஒருவர் மற்றவரைக் கடித்துவிட்டார். கடிக்கப்பட்டவர் தனது கையை அவரது வாயிலிருந்து இழுத்தபோது, (கடித்தவரின்) முன் பல் ஒன்று பெயர்ந்து விழுந்துவிட்டது. இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்பட்டது. அவர்கள், "உங்களில் ஒருவர், இளம் ஒட்டகம் கடிப்பது போல் தனது சகோதரனைக் கடிப்பாரா?" என்று கேட்டு, அதை (பல் விழுந்ததற்கான நஷ்ட ஈடு கோரிக்கையை) செல்லாது என்று தீர்ப்பளித்தார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இதுவும் இதுவும் சமம்." (அறிவிப்பாளர் கூறினார்: அதாவது, கட்டைவிரலும் சுண்டுவிரலும் (இழப்பீட்டுத் தொகையின் அடிப்படையில்) சமம்.)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"இதுவும் இதுவும் சமமானவை (நஷ்டஈட்டுத் தொகையில்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதாவது, சுண்டு விரலையும் பெருவிரலையும் (குறிப்பிட்டார்கள்).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “இதுவும் இதுவும் சமம்” - அதாவது சுண்டு விரலும் பெருவிரலும் (இரண்டும் சமமானவை, குறிப்பாக விரல்களுக்கான இரத்தப் பணத்தில் (தியத்) சமம்).