حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் சிறந்தது எது?" என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(பிறருக்கு) உணவளிப்பதும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள்.
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமியப் பண்புகளில் மிகச் சிறந்தது எது?" என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "மக்களுக்கு உணவளியுங்கள், மேலும், நீங்கள் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுங்கள்."
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் நற்செயல்களில் எது சிறந்தது?" என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் உணவு அளிப்பதும், நீங்கள் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் (முகமன்) கூறுவதும் ஆகும்.
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் கூறினார்கள் :
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்: இஸ்லாத்தில் சிறந்தது எது? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: நீர் உணவு அளிப்பதும், நீர் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்.
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ أَبِي الْخَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، . أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الإِسْلاَمِ خَيْرٌ قَالَ تُطْعِمُ الطَّعَامَ وَتَقْرَأُ السَّلاَمَ عَلَى مَنْ عَرَفْتَ وَمَنْ لَمْ تَعْرِفْ .
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாத்தில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “நீர் உணவளிப்பதும், நீர் அறிந்தவர்களுக்கும் அறியாதவர்களுக்கும் ஸலாம் கூறுவதும் ஆகும்” என்று கூறினார்கள்.