حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَاهُ قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ، سَمِعَ عُبَادَةَ بْنَ الصَّامِتِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ " أَتُبَايِعُونِي عَلَى أَنْ لاَ تُشْرِكُوا بِاللَّهِ شَيْئًا وَلاَ تَزْنُوا وَلاَ تَسْرِقُوا ". وَقَرَأَ آيَةَ النِّسَاءِ ـ وَأَكْثَرُ لَفْظِ سُفْيَانَ قَرَأَ الآيَةَ ـ " فَمَنْ وَفَى مِنْكُمْ فَأَجْرُهُ عَلَى اللَّهِ، وَمَنْ أَصَابَ مِنْ ذَلِكَ شَيْئًا فَعُوقِبَ فَهُوَ كَفَّارَةٌ لَهُ، وَمَنْ أَصَابَ مِنْهَا شَيْئًا مِنْ ذَلِكَ فَسَتَرَهُ اللَّهُ فَهْوَ إِلَى اللَّهِ، إِنْ شَاءَ عَذَّبَهُ وَإِنْ شَاءَ غَفَرَ لَهُ} ". تَابَعَهُ عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ فِي الآيَةِ.
உப்பாதா பின் அஸ்-ஸாமித் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தபோது அவர்கள் (எங்களிடம்), "அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டீர்கள் என்றும், விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்றும், திருடமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி (பைஅத்) அளியுங்கள்" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் பெண்கள் (தொடர்பான) வசனத்தை ஓதினார்கள். (மேலும் கூறினார்கள்:) "உங்களில் யார் (இந்த வாக்குறுதியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. யார் இக்குற்றங்களில் ஏதேனும் ஒன்றைச் செய்து, அதற்காக (இவ்வுலகில்) தண்டிக்கப்பட்டுவிடுகிறாரோ, அது அவருக்குப் (பாவப்) பரிகாரமாகிவிடும். யார் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்து, அல்லாஹ் அதை (பிறருக்குத் தெரியாமல்) மறைத்துவிடுகிறானோ, அவரது விவகாரம் அல்லாஹ்விடம் உள்ளது; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்."
உபாதா பின் அஸ்-ஸாமித் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு சபையில் இருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்கமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள்; விபச்சாரம் செய்யமாட்டீர்கள் என்று என்னிடம் பைஅத் (உறுதிமொழி) செய்யுங்கள்" என்று கூறினார்கள். பிறகு (அது தொடர்பான) அந்த வசனம் முழுவதையும் ஓதிக்காட்டினார்கள். (மேலும் கூறினார்கள்:) "உங்களில் எவர் (இவ்வுறுதிமொழியை) நிறைவேற்றுகிறாரோ, அவருக்குரிய நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. எவர் இக்குற்றங்களில் எதையேனும் செய்து, அதற்காக (இவ்வுலகில்) தண்டிக்கப்படுகிறாரோ, அது அவருக்குப் பரிகாரமாகிவிடும். எவர் இக்குற்றங்களில் எதையேனும் செய்து, அல்லாஹ் அதனை (மக்களுக்குத் தெரியாமல்) மறைத்துவிடுகிறானோ, (அவரைத் தண்டிப்பதும் மன்னிப்பதும்) அல்லாஹ்வைச் சார்ந்ததாகும்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்."