حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ أُتِيَ عُمَرُ بِامْرَأَةٍ تَشِمُ فَقَامَ فَقَالَ أَنْشُدُكُمْ بِاللَّهِ مَنْ سَمِعَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الْوَشْمِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقُمْتُ فَقُلْتُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَنَا سَمِعْتُ. قَالَ مَا سَمِعْتَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ لاَ تَشِمْنَ وَلاَ تَسْتَوْشِمْنَ .
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பச்சை குத்தும் ஒரு பெண் உமர் (ரழி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். உமர் (ரழி) அவர்கள் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் பெயரால் உங்களை மன்றாடிக் கேட்கிறேன்; நபி (ஸல்) அவர்கள் பச்சை குத்துவது தொடர்பாக ஏதேனும் கூறியதை உங்களில் யார் கேட்டிருக்கிறீர்கள்?" என்று கூறினார்கள். நான் எழுந்து, "இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் (அது குறித்து) ஒன்றைச் செவியுற்றேன்" என்றேன். அவர்கள், "நீங்கள் என்ன செவியுற்றீர்கள்?" என்று கேட்டார்கள். நான் கூறினேன்: "நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கி), '(பெண்களே!) நீங்கள் (பிறருக்குப்) பச்சை குத்தாதீர்கள்; மேலும், நீங்கள் (உங்களுக்குப்) பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்' என்று கூறுவதை நான் கேட்டேன்."