இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

3497சுனன் இப்னுமாஜா
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ سُفْيَانَ، عَنِ ابْنِ خُثَيْمٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ ‏ خَيْرُ أَكْحَالِكُمُ الإِثْمِدُ يَجْلُو الْبَصَرَ وَيُنْبِتُ الشَّعَرَ ‏ ‏ ‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்கள் அஞ்சனங்களில் சிறந்தது இஸ்மித் ஆகும். ஏனெனில் அது பார்வையைத் தெளிவாக்கும்; மேலும் (கண்) இமை முடிகளை வளரச் செய்யும்.”

ஹதீஸ் தரம் : ஹஸன் (தாருஸ்ஸலாம் பதிப்பு)