இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின்போது தமது ஒட்டகத்தின் மீது (அமர்ந்திருந்தவாறு) கஃபாவை வலம் வந்து, (ஹஜருல் அஸ்வத் கல் பதிக்கப்பெற்ற) மூலையை ஒரு கைத்தடியால் தொட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீது அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (அவர்கள்) வளைந்த நுனியுடைய கைத்தடியால் ருக்ன் (ஹஜருல் அஸ்வத் கல் அமைந்துள்ள கஃபாவின் மூலை) ஐத் தொட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் வதாவின் போது ஒட்டகத்தின் மீது (கஅபாவை) தவாஃப் செய்து, வளைந்த நுனியுடைய கைத்தடியால் (ஹஜருல் அஸ்வத்) மூலையைத் தொட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடைபெறும் ஹஜ்ஜின்போது ஒட்டகத்தின் மீது தவாஃப் செய்து, வளைந்த தடியால் மூலையை (ஹஜருல் அஸ்வத்) தொட்டார்கள்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ ـ صلى الله عليه وسلم ـ طَافَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى بَعِيرٍ يَسْتَلِمُ الرُّكْنَ بِمِحْجَنٍ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது ஒட்டகத்தின் மீது தவாஃப் செய்தார்கள்; அப்போது ஒரு தடியால் (மிஹ்ஜன் எனும் வளைந்த தடியால்) மூலையை (ஹஜருல் அஸ்வத் மூலையை) தொட்டார்கள்.