இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4237சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنِ امْرَأَتِهِ، عَنْ أُخْتٍ، لِحُذَيْفَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ يَا مَعْشَرَ النِّسَاءِ أَمَا لَكُنَّ فِي الْفِضَّةِ مَا تَحَلَّيْنَ بِهِ أَمَا إِنَّهُ لَيْسَ مِنْكُنَّ امْرَأَةٌ تَحَلَّى ذَهَبًا تُظْهِرُهُ إِلاَّ عُذِّبَتْ بِهِ ‏ ‏ ‏.‏
ஹுதைஃபா (ரழி) அவர்களின் சகோதரி ஒருவர் அறிவிக்கிறார்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பெண்களே! நீங்கள் உங்களை அலங்கரித்துக் கொள்வதற்கு உங்களிடம் வெள்ளி இல்லையா? அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் எந்தப் பெண் தங்கத்தால் தன்னை அலங்கரித்து அதை (பிறருக்கு) வெளிக்காட்டுகிறாளோ, அவள் நிச்சயமாக அதனாலேயே (மறுமையில்) தண்டிக்கப்படுவாள்."
ஹதீஸ் தரம் : ளயீஃப் (அல்-அல்பானீ)
ضعيف (الألباني)