حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ طَافَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْبَيْتِ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் சவாரி செய்தவாறு கஃபாவை தவாஃப் செய்தார்கள். மேலும், அவர்கள் (ஹஜருல் அஸ்வத்) மூலைக்கு வந்தபோதெல்லாம், அதை நோக்கி (தமது கைத்தடியால்) சுட்டிக்காட்டினார்கள்.
حَدَّثَنِي إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم طَافَ بِالْبَيْتِ، وَهْوَ عَلَى بَعِيرٍ، كُلَّمَا أَتَى عَلَى الرُّكْنِ أَشَارَ إِلَيْهِ بِشَىْءٍ فِي يَدِهِ وَكَبَّرَ.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (கஅபாவை) தவாஃப் செய்தார்கள். அவர்கள் (ஹஜருல் அஸ்வத் உள்ள) மூலைக்கு வரும்போதெல்லாம், தம் கையிலிருந்த ஒரு பொருளால் அதைச் சுட்டிக்காட்டி, 'அல்லாஹு அக்பர்' என்று கூறினார்கள்."