أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اتَّخَذَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَكَانَ جَعَلَ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ فَاتَّخَذَ النَّاسُ خَوَاتِيمَ مِنْ ذَهَبٍ فَطَرَحَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَطَرَحَ النَّاسُ خَوَاتِيمَهُمْ وَاتَّخَذَ خَاتَمًا مِنْ فِضَّةٍ فَكَانَ يَخْتِمُ بِهِ وَلاَ يَلْبَسُهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தங்க மோதிரத்தைச் செய்துகொண்டார்கள். அதன் கல்லைத் தங்கள் உள்ளங்கையின் உட்புறத்தில் அமைத்திருந்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் தங்க மோதிரங்களைச் செய்துகொண்டார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை எறிந்துவிட்டார்கள். (அதைப் பின்பற்றி) மக்களும் தங்கள் மோதிரங்களை எறிந்துவிட்டார்கள். பின்னர் அவர்கள் ஒரு வெள்ளி மோதிரத்தைச் செய்துகொண்டார்கள். அதைக் கொண்டு முத்திரையிட்டு வந்தார்கள். ஆனால் அவர்கள் அதை (நிரந்தரமாக) அணியவில்லை.