இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5943ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ، وَالْمُسْتَوْشِمَاتِ، وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ، مَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي كِتَابِ اللَّهِ‏.‏
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், பிறருக்குப் பச்சை குத்திவிடும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரம்போன்றவற்றால் தேய்த்துப் பல்வரிசையைச் சீராக்கிக் கொள்ளும் பெண்கள் ஆகிய அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அமைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களை அல்லாஹ் சபித்துள்ளான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தவர்களையும், அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1106 fஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ، بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُبَاشِرُ وَهُوَ صَائِمٌ ‏.‏
ஆயிஷா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது (தங்கள் மனைவியரை) அணைத்துக் கொள்வார்கள் என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح