حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ،
قَالَ قَالَ عَلِيٌّ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ
هَذِهِ . قَالَ فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا .
அலி (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னுடைய இந்த விரலிலோ அல்லது அந்த விரலிலோ நான் மோதிரம் அணிவதை எனக்குத் தடை விதித்தார்கள். (அறிவிப்பாளர்) நடு விரலையும் அதற்கடுத்த (சுட்டு) விரலையும் சுட்டிக்காட்டினார்கள்.