حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ مَلِكَ الرُّومِ، أَهْدَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم مُسْتَقَةً مِنْ سُنْدُسٍ فَلَبِسَهَا فَكَأَنِّي أَنْظُرُ إِلَى يَدَيْهِ تَذَبْذَبَانِ ثُمَّ بَعَثَ بِهَا إِلَى جَعْفَرٍ فَلَبِسَهَا ثُمَّ جَاءَهُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنِّي لَمْ أُعْطِكَهَا لِتَلْبَسَهَا . قَالَ فَمَا أَصْنَعُ بِهَا قَالَ أَرْسِلْ بِهَا إِلَى أَخِيكَ النَّجَاشِيِّ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ரோமப் பேரரசர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டு அங்கி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார், அதை அவர்கள் அணிந்தார்கள். (அந்த அங்கியை அணிந்தவாறு) அவர்களின் கைகள் அசைந்த காட்சி என் கண்களுக்கு முன்பாக இருக்கிறது. பின்னர் அதை ஜஃபர் (ரழி) அவர்களுக்கு அனுப்பினார்கள். அவர்கள் அதை அணிந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் இதை நீங்கள் அணிவதற்காக உங்களுக்கு அனுப்பவில்லை. அவர்கள் கேட்டார்கள்: நான் இதை என்ன செய்ய வேண்டும்? அதற்கு அவர்கள் பதிலளித்தார்கள்: இதை உங்கள் சகோதரர் நஜ்ஜாஷிக்கு அனுப்பிவிடுங்கள்.