وَحَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ بُكَيْرًا،
حَدَّثَهُ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله
عليه وسلم أَنَّهَا نَصَبَتْ سِتْرًا فِيهِ تَصَاوِيرُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَنَزَعَهُ
قَالَتْ فَقَطَعْتُهُ وِسَادَتَيْنِ . فَقَالَ رَجُلٌ فِي الْمَجْلِسِ حِينَئِذٍ يُقَالُ لَهُ رَبِيعَةُ بْنُ عَطَاءٍ مَوْلَى
بَنِي زُهْرَةَ أَفَمَا سَمِعْتَ أَبَا مُحَمَّدٍ يَذْكُرُ أَنَّ عَائِشَةَ قَالَتْ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه
وسلم يَرْتَفِقُ عَلَيْهِمَا قَالَ ابْنُ الْقَاسِمِ لاَ . قَالَ لَكِنِّي قَدْ سَمِعْتُهُ . يُرِيدُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ
.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரழி) அவர்கள் கூறியதாவது:
நான் (உருவப்) படங்கள் உள்ள ஒரு திரைச்சீலையைத் தொங்கவிட்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்து அதை அகற்றினார்கள். "எனவே, நான் அதைத் துண்டித்து இரண்டு தலையணைகளாக ஆக்கினேன்" என்று ஆயிஷா (ரழி) கூறினார்கள்.
அப்போது அந்த அவையில் இருந்த பனூ ஸுஹ்ராவின் மேலாவான (விடுவிக்கப்பட்ட அடிமை) ரபீஆ பின் அதா என்பவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவற்றின் மீது சாய்ந்து கொள்வார்கள் என்று ஆயிஷா (ரழி) கூறியதாக அபூ முஹம்மத் குறிப்பிட்டதை நீங்கள் கேட்டீர்களா?" என்று வினவினார்.
அதற்கு (அப்துர் ரஹ்மான்) இப்னுல் காசிம் "இல்லை" என்றார். உடனே (ரபீஆ), "ஆனால் நான் அவரிடமிருந்து (காசிம் பின் முஹம்மதிடமிருந்து) செவியுற்றேன்" என்றார்.