இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

5636ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنِي عَمْرُو بْنُ عَبَّاسٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَالِمٍ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى أُمِّ الْفَضْلِ عَنْ أُمِّ الْفَضْلِ، أَنَّهُمْ شَكُّوا فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ، فَبُعِثَ إِلَيْهِ بِقَدَحٍ مِنْ لَبَنٍ فَشَرِبَهُ‏.‏
உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்களா என்பதில் மக்கள் சந்தேகப்பட்டார்கள். எனவே, (உம்முல் ஃபள்ல் அவர்களால்) அவர்களுக்குப் பால் நிறைந்த ஒரு கிண்ணம் அனுப்பி வைக்கப்பட்டது; அதை அவர்கள் குடித்தார்கள்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح