وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا أَفْلَحُ، - يَعْنِي ابْنَ حُمَيْدٍ - عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتِ اسْتَأْذَنَتْ سَوْدَةُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَيْلَةَ الْمُزْدَلِفَةِ تَدْفَعُ قَبْلَهُ وَقَبْلَ حَطْمَةِ النَّاسِ وَكَانَتِ امْرَأَةً ثَبِطَةً - يَقُولُ الْقَاسِمُ وَالثَّبِطَةُ الثَّقِيلَةُ - قَالَ فَأَذِنَ لَهَا فَخَرَجَتْ قَبْلَ دَفْعِهِ وَحَبَسَنَا حَتَّى أَصْبَحْنَا فَدَفَعْنَا بِدَفْعِهِ وَلأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ فَأَكُونَ أَدْفَعُ بِإِذْنِهِ أَحَبُّ إِلَىَّ مِنْ مَفْرُوحٍ بِهِ .
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:
சவ்தா (ரலி) அவர்கள் உடல் பருமனான (நடப்பதற்குச் சிரமப்படும்) ஒரு பெண்ணாக இருந்தார்கள். முஸ்தலிஃபா இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பாகவும், மக்களின் நெரிசல் ஏற்படுவதற்கு முன்பாகவும் (மினாவிற்குச்) செல்ல அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். எனவே நபி (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பே சவ்தா (ரலி) புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனால், நாங்கள் காலை விடியும்வரை (அங்கேயே) இருக்கும்படி நபி (ஸல்) அவர்கள் தடுத்துவிட்டார்கள். எனவே (விடிந்த பின்) அவர் புறப்பட்டபோதே நாங்களும் புறப்பட்டோம். "சவ்தா (ரலி) அனுமதி கேட்டது போன்று நானும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்று, அவருடைய அனுமதியுடன் (முஸ்தலிஃபாவிலிருந்து) புறப்பட்டிருந்தால், அது எனக்கு (உலகில்) மகிழ்ச்சியளிக்கும் எதனையும் விட மிகவும் விருப்பமானதாக இருந்திருக்கும்."