وعن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم مر على رجل من الأنصار وهو يعظ أخاه في الحياء، فقال رسول الله صلى الله عليه وسلم: دعه فإن الحياء من الإيمان ((متفق عليه)) .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், வெட்கப்படுவது குறித்து தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்த அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவரை விட்டுவிடுங்கள், ஏனெனில், வெட்கம் ஈமானின் ஒரு பகுதியாகும்" என்று கூறினார்கள்.