இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6666ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم زُرْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ‏.‏ قَالَ ‏"‏ لاَ حَرَجَ ‏"‏‏.‏ قَالَ آخَرُ حَلَقْتُ قَبْلَ أَنْ أَذْبَحَ‏.‏ قَالَ ‏"‏ لاَ حَرَجَ ‏"‏‏.‏ قَالَ آخَرُ ذَبَحْتُ قَبْلَ أَنْ أَرْمِيَ‏.‏ قَالَ ‏"‏ لاَ حَرَجَ ‏"‏‏.‏
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (அவர்கள் நஹ்ர் நாளில் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தபோது), "நான் ஜம்ராவில் ரமீ (கற்கள் எறிவதற்கு) செய்வதற்கு முன்பே கஃபாவை தவாஃப் செய்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "(அதில்) குற்றமில்லை" என்று கூறினார்கள். மற்றொருவர், "நான் (குர்பானிப்) பிராணியை அறுப்பதற்கு முன்பே என் தலையை மழித்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை" என்று கூறினார்கள். மூன்றாமவர், "நான் ஜம்ராவில் ரமீ (கற்கள் எறிவதற்கு) செய்வதற்கு முன்பே (குர்பானிப்) பிராணியை அறுத்துவிட்டேன்" என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "குற்றமில்லை" என்று கூறினார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح