இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: மக்கள் இறையில்லத்தை இறுதியாக வலம் வருமாறு (தவாஃபுல் விதாச் செய்யுமாறு) (நபி (ஸல்) அவர்களால்) கட்டளையிடப்பட்டார்கள், ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அதிலிருந்து விலக்களிக்கப்பட்டார்கள்.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: "மக்கள் (மக்காவிலிருந்து திரும்பும்போது) தமது இறுதிச் செயல் கஅபாவி(ல் தவாஃப் செய்வது)டன் இருக்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டுள்ளார்கள். எனினும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு இதில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது."