இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1211 rஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ أَمِّ الْمُؤْمِنِينَ، ح وَعَنِ الْقَاسِمِ، عَنْ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ يَصْدُرُ النَّاسُ بِنُسُكَيْنِ وَأَصْدُرُ بِنُسُكٍ وَاحِدٍ قَالَ ‏ ‏ انْتَظِرِي فَإِذَا طَهَرْتِ فَاخْرُجِي إِلَى التَّنْعِيمِ فَأَهِلِّي مِنْهُ ثُمَّ الْقَيْنَا عِنْدَ كَذَا وَكَذَا - قَالَ أَظُنُّهُ قَالَ غَدًا - وَلَكِنَّهَا عَلَى قَدْرِ نَصَبِكِ - أَوْ قَالَ - نَفَقَتِكِ ‏ ‏ ‏.‏
முஃமின்களின் தாயார் (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் கூறினார்கள்:
"அல்லாஹ்வின் தூதரே! மக்கள் இரண்டு வழிபாடுகளை (ஹஜ் மற்றும் உம்ரா ஆகிய இரண்டையும்) செய்துவிட்டுத் திரும்புகிறார்கள். ஆனால் நான் ஒரு வழிபாட்டுடன் (மட்டும்) திரும்புகிறேன்" என்று கூறினேன்.
அதற்கு அவர்கள், "காத்திரு! நீ தூய்மையடைந்ததும் தன்ஈம் சென்று அங்கிருந்து இஹ்ராம் அணிந்து கொள். பின்னர் இன்ன நேரத்தில் எங்களைச் சந்தி" என்று கூறினார்கள் (அறிவிப்பாளர் கூறுகிறார்: "நாளை" என்று அவர்கள் சொன்னதாக நான் நினைக்கிறேன்). மேலும், "(இதற்கான கூலி) உன் சிரமத்திற்கு அல்லது உன் செலவிற்குத் தக்கவாறே அமையும்" (என்றும் கூறினார்கள்).
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح