பராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அன்சாரிகள் ஹஜ் செய்துவிட்டுத் திரும்பினால், வீடுகளுக்குள் அவற்றின் பின்புறங்கள் வழியாகவே நுழைவார்கள். (ஒரு முறை) அன்சாரிகளில் ஒருவர் வந்து, தம் வீட்டின் வாசல் வழியாக நுழைந்தார். அது குறித்து அவரிடம் (குறையாகப்) பேசப்பட்டது. அப்போது, 'வ லைஸல் பிர்ரு பி அன் தஃதுல் பயூத மின் ழுஹூரிஹா' ("நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வருவது புண்ணியமல்ல") எனும் இவ்வசனம் அருளப்பெற்றது.