அபூ ஹுரைரா (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதாக அறிவித்தார்கள்: நான் ஒரு ஊருக்கு (புலம் பெயருமாறு) கட்டளையிடப்பட்டுள்ளேன்; அது (மற்ற) ஊர்களை மிகைத்துவிடும். அவர்கள் (மக்கள்) அதை யஸ்ரிப் என்று அழைக்கிறார்கள்; அதுவே மதீனா ஆகும். உலை இரும்பின் கசடை அகற்றுவதைப் போல அது (தீய) மனிதர்களை நீக்கிவிடும்.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் பட்டணங்களை உண்ணும் ஒரு பட்டணத்திற்கு (குடியேற) கட்டளையிடப்பட்டேன். அவர்கள் அதனை 'யத்ரிப்' என்று கூறுகின்றனர். ஆனால் அது மதீனா ஆகும். கொல்லனின் உலை இரும்பிலிருந்து அதன் கசடுகளை அகற்றுவதைப் போன்று அது (தீய) மனிதர்களை அகற்றிவிடும்."