சலமா இப்னுல் அக்வா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளன்று அஸ்லம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை அனுப்பி, (அதுவரை) நோன்பு நோற்காதவர்கள் (அன்றைய தினம்) நோன்பு நோற்கும்படியும், (ஏற்கனவே) உணவு உண்டவர்கள் மாலை வரை (தமது) நோன்பை முழுமைப்படுத்தும்படியும் மக்களுக்கு அறிவிக்குமாறு அவருக்குக் கட்டளையிட்டார்கள்.