ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, இறந்துவிட்ட தனது தாயார் மீது ஒரு மாத நோன்பு கடமையாக உள்ளது என்று கூறி, அதை நான் அவர் சார்பாக நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உன் தாயார் மீது ஏதேனும் கடன் இருந்திருந்தால், அதை நீ செலுத்துவாயா?” என்று கேட்டார்கள். அவள், “ஆம்” என்று பதிலளித்தாள். நபி (ஸல்) அவர்கள், “எனவே, அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதியுடையதாகும்” என்று கூறினார்கள்.