حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، - وَتَقَارَبَا فِي اللَّفْظِ - قَالاَ حَدَّثَنَا
جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ، قَالَ كَانَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ
يُقَالُ لَهُ أَبُو شُعَيْبٍ وَكَانَ لَهُ غُلاَمٌ لَحَّامٌ فَرَأَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَرَفَ فِي
وَجْهِهِ الْجُوعَ فَقَالَ لِغُلاَمِهِ وَيْحَكَ اصْنَعْ لَنَا طَعَامًا لِخَمْسَةِ نَفَرٍ فَإِنِّي أُرِيدُ أَنْ أَدْعُوَ النَّبِيَّ
صلى الله عليه وسلم خَامِسَ خَمْسَةٍ . قَالَ فَصَنَعَ ثُمَّ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَدَعَاهُ
خَامِسَ خَمْسَةٍ وَاتَّبَعَهُمْ رَجُلٌ فَلَمَّا بَلَغَ الْبَابَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِنَّ هَذَا
اتَّبَعَنَا فَإِنْ شِئْتَ أَنْ تَأْذَنَ لَهُ وَإِنْ شِئْتَ رَجَعَ . قَالَ لاَ بَلْ آذَنُ لَهُ يَا رَسُولَ اللَّهِ .
அபூ மஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
அன்சாரிகளில் அபூ ஷுஐப் என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவருக்குக் கசாப்புக் கடைக்காரராக ஓர் அடிமை இருந்தார். அவர் (அபூ ஷுஐப்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்தபோது அவர்களின் முகத்தில் பசியின் அடையாளத்தை அறிந்துகொண்டார்.
உடனே அவர் தம் அடிமையிடம், "அடடா! (விரைவாகச் செய்!) ஐந்து நபர்களுக்குப் போதுமான உணவை எங்களுக்காகத் தயார் செய். ஏனெனில், நான் நபி (ஸல்) அவர்களை ஐவரில் ஐந்தாமவராக (விருந்திற்கு) அழைக்க விரும்புகிறேன்" என்று கூறினார்.
அவர் (உணவைச்) சமைத்தார். பிறகு (அபூ ஷுஐப்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஐவரில் ஐந்தாமவராக அவர்களை அழைத்தார். அவர்களுடன் ஒரு மனிதர் பின்தொடர்ந்து வந்தார்.
வீட்டு வாசலை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள், "இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்துவிட்டார். நீர் விரும்பினால் இவருக்கு (உள்ளே வர) அனுமதியளிக்கலாம்; நீர் விரும்பினால் இவர் திரும்பிச் சென்றுவிடுவார்" என்று கூறினார்கள்.
அதற்கு அவர், "இல்லை; நான் இவருக்கு அனுமதியளிக்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினார்.