أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُمْ كَانُوا يَبْتَاعُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَعْلَى السُّوقِ جُزَافًا فَنَهَاهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ فِي مَكَانِهِ حَتَّى يَنْقُلُوهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில், அவர்கள் சந்தையின் மேற்பகுதியில் (பொருட்களை) அளக்காமல் (மொத்தமாக) வாங்கி வந்தார்கள். அப்பொருட்களை (வேறிடத்திற்கு) நகர்த்தும் வரை, அதே இடத்தில் வைத்து விற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் (சஹாபாக்கள்) பயணிகளிடமிருந்து உணவுப் பொருட்களை வாங்கி வந்தனர். அதனை உணவுச் சந்தைக்குக் கொண்டு செல்லும் வரை, வாங்கிய இடத்திலேயே விற்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانُوا يَتَبَايَعُونَ الطَّعَامَ جُزَافًا بِأَعْلَى السُّوقِ فَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَبِيعُوهُ حَتَّى يَنْقُلُوهُ .
இப்னு உமர் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
மக்கள் சந்தையின் மேற்பகுதியில் உணவுப் பொருட்களை (சரியாக) அளக்காமலும், நிறுக்காமலும் (தோராயமாக) வியாபாரம் செய்து வந்தார்கள். (அவ்வாறு வாங்கிய) அந்தப் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதற்கு முன்பு, அதை (அதே இடத்தில்) விற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.