இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1543 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنَا ابْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவரொருவர் ஒரு பேரீச்ச மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, பிறகு அம்மரத்தை விற்கிறாரோ, வாங்குபவர் (பழங்களும் தமக்கே வேண்டுமென) ஒரு நிபந்தனையை விதித்தாலன்றி, அம்மரத்தின் பழம் அதனை மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியதாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
4635சுனனுந் நஸாயீ
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلاً ثُمَّ بَاعَ أَصْلَهَا فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ إِلاَّ أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ ‏ ‏ ‏.‏
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"எந்த மனிதராவது ஒரு பேரீச்சை மரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து பின்னர் அதன் அடிப்பகுதியை (மரத்தை) விற்றால், வாங்குபவர் (கனிகள் தனக்குரியவை என) நிபந்தனை விதித்தாலே தவிர, அந்த மரத்தின் கனிகள் மகரந்தச் சேர்க்கை செய்தவருக்கே உரியன."