حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ احْتَجَمَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ، وَلَوْ عَلِمَ كَرَاهِيَةً لَمْ يُعْطِهِ.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா செய்துகொண்டார்கள். மேலும் ஹிஜாமா செய்தவருக்கு அவரது கூலியை வழங்கினார்கள். அது வெறுக்கத்தக்கதாக இருந்திருப்பின், அவர்கள் அவருக்கு வழங்கியிருக்க மாட்டார்கள்.
حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم احْتَجَمَ وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَاسْتَعَطَ.
இப்னு அப்பாஸ் (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி (ஹிஜாமா) எடுக்கப்பட்டு, தங்களுக்கு இரத்தம் குத்தி எடுத்தவருக்கு கூலியைக் கொடுத்து, பின்னர் ஸுஊத் (மூக்கின் வழியாக உறிஞ்சப்படும் மருந்து) எடுத்துக்கொண்டார்கள்.
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدِ بْنِ صَخْرٍ الدَّارِمِيُّ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا وُهَيْبٌ،
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم احْتَجَمَ
وَأَعْطَى الْحَجَّامَ أَجْرَهُ وَاسْتَعَطَ .
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமா (இரத்தம் உறிஞ்சி எடுத்தல்) செய்துகொண்டார்கள். (அதைச்) செய்தவருக்கு அவரின் கூலியைக் கொடுத்தார்கள். மேலும், தம் நாசியில் மருந்து இட்டுக்கொண்டார்கள் (அதாவது, மூக்கின் வழியாக மருந்தை உள்ளிழுத்தார்கள்).