இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1438ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ الْخَازِنُ الْمُسْلِمُ الأَمِينُ الَّذِي يُنْفِذُ ـ وَرُبَّمَا قَالَ يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبٌ بِهِ نَفْسُهُ، فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ ‏ ‏‏.‏
அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "தமக்கு இடப்பட்டக் கட்டளையை முழுமையாகவும், நிறைவாகவும், மனமுவந்தும் நிறைவேற்றி, எவருக்குக் கொடுக்குமாறு பணிக்கப்பட்டாரோ அவரிடம் அதை ஒப்படைக்கின்ற நம்பிக்கைக்குரிய முஸ்லிம் காப்பாளர் (அல்லது பொருளாளர்), தர்மம் செய்யும் இருவரில் ஒருவராவார்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
2260ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْبَرَنِي جَدِّي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏ ‏ الْخَازِنُ الأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ ‏ ‏‏.‏
அபூ மூஸா அல்-அஷ்அரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "தனக்கு கட்டளையிடப்பட்டதை மனமுவந்து கொடுக்கும் நேர்மையான பொருளாளர், தர்மம் செய்யும் இருவரில் ஒருவர் ஆவார், (மற்றவர் அந்தச் செல்வத்தின் உரிமையாளர்)."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1023ஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو عَامِرٍ الأَشْعَرِيُّ وَابْنُ نُمَيْرٍ وَأَبُو كُرَيْبٍ كُلُّهُمْ عَنْ أَبِي أُسَامَةَ، - قَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، - حَدَّثَنَا بُرَيْدٌ، عَنْ جَدِّهِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ ‏ إِنَّ الْخَازِنَ الْمُسْلِمَ الأَمِينَ الَّذِي يُنْفِذُ - وَرُبَّمَا قَالَ يُعْطِي - مَا أُمِرَ بِهِ فَيُعْطِيهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبَةً بِهِ نَفْسُهُ فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ - أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ ‏ ‏ ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நம்பிக்கைக்குரிய முஸ்லிம் கருவூலக் காப்பாளர், தமக்குக் கட்டளையிடப்பட்டதை நிறைவேற்றி - (சில சமயம் (அறிவிப்பாளர்) 'கொடுக்கிறார்' என்றும் கூறினார்) - அதனை முழுமையாகவும் நிறைவாகவும், மனமுவந்து யாருக்குக் கொடுக்கக் கட்டளையிடப்பட்டதோ அவரிடம் ஒப்படைத்தால், அவரும் தர்மம் செய்யும் இருவரில் ஒருவராவார்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح
1684சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، - الْمَعْنَى - قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّ الْخَازِنَ الأَمِينَ - الَّذِي يُعْطِي مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبَةً بِهِ نَفْسُهُ حَتَّى يَدْفَعَهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ - أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ ‏ ‏ ‏.‏
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்பிக்கைக்குரிய கருவூலக் காப்பாளர், தமக்குக் கட்டளையிடப்பட்டதை முழுமையாகவும், நிறைவாகவும் (எந்தக் குறைவுமின்றி), மனமுவந்து, யாருக்குக் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்டாரோ அவரிடம் அதை ஒப்படைத்தால், அவரும் (அச்சதகாவை ஏவியவருடன் சேர்த்து) சதகா கொடுக்கும் இருவரில் ஒருவராவார்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (அல்-அல்பானீ)
صحيح (الألباني)
180ரியாதுஸ் ஸாலிஹீன்
وعن أبي موسى الأشعري رضي الله عنه ، عن النبي صلى الله عليه وسلم أنه قال‏:‏ ‏ ‏ الخازن المسلم الأمين الذي ينفذ ما أمر به، فيعطيه كاملاً موفراً، طيبة به نفسه فيدفعه إلى الذي أمر له به أحد المتصدقين‏ ‏ ‏(‏‏(‏متفق عليه‏)‏‏)‏ ‏.‏
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நம்பிக்கையான முஸ்லிம் காப்பாளர், தமக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றி, (தர்மப் பொருளை) முழுமையாகவும் நிறைவாகவும், மனப்பூர்வமான மகிழ்ச்சியுடன், எவருக்குக் கொடுக்கும்படி கட்டளையிடப்பட்டாரோ அவருக்கு வழங்கினால், அவரும் (தர்மம் செய்யும்படி கட்டளையிட்டவருடன் சேர்த்து) தர்மம் செய்யும் இருவரில் ஒருவராவார்."