حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عُقْبَةُ بْنُ خَالِدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَرَّقَ نَخْلَ بَنِي النَّضِيرِ وَقَطَعَ . وَفِيهِ يَقُولُ شَاعِرُهُمْ فَهَانَ عَلَى سَرَاةِ بَنِي لُؤَىٍّ حَرِيقٌ بِالْبُوَيْرَةِ مُسْتَطِيرُ
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் கோத்திரத்தாரின் பேரீச்சை மரங்களை எரித்து, அவற்றை வெட்டி வீழ்த்தினார்கள். அது குறித்து, அவர்களுடைய கவிஞர் கூறினார்:
“பனூ லுஅய் கோத்திரத்தின் மேன்மக்களுக்கு இது எளிதானது –
அச்சமூட்டும் விதத்தில் அல்-புவைராவை எரிப்பது.”