وَحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، أَنَّهُ قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُكْرِي أَرَضِيهِ حَتَّى بَلَغَهُ أَنَّ رَافِعَ بْنَ خَدِيجٍ الأَنْصَارِيَّ كَانَ يَنْهَى عَنْ كِرَاءِ الأَرْضِ فَلَقِيَهُ عَبْدُ اللَّهِ فَقَالَ يَا ابْنَ خَدِيجٍ مَاذَا تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي كِرَاءِ الأَرْضِ قَالَ رَافِعُ بْنُ خَدِيجٍ لِعَبْدِ اللَّهِ سَمِعْتُ عَمَّىَّ - وَكَانَا قَدْ شَهِدَا بَدْرًا - يُحَدِّثَانِ أَهْلَ الدَّارِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كِرَاءِ الأَرْضِ . قَالَ عَبْدُ اللَّهِ لَقَدْ كُنْتُ أَعْلَمُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّ الأَرْضَ تُكْرَى ثُمَّ خَشِيَ عَبْدُ اللَّهِ أَنْ يَكُونَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَحْدَثَ فِي ذَلِكَ شَيْئًا لَمْ يَكُنْ عَلِمَهُ فَتَرَكَ كِرَاءَ الأَرْضِ .
சலீம் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ராஃபிஉ பின் கதீஜ் அல்அன்சாரி (ரலி) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடுக்கிறார்கள் எனும் செய்தி தமக்கு எட்டும்வரை தமது நிலத்தைக் குத்தகைக்குவிட்டு வந்தார்கள். (அச்செய்தி கிடைத்ததும்) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் ராஃபிஉ அவர்களைச் சந்தித்து, "இப்னு கதீஜ் அவர்களே! நிலத்தைக் குத்தகைக்கு விடுவது தொடர்பாக இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து தாங்கள் அறிவிப்பது என்ன?" என்று கேட்டார்கள்.
அதற்கு ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடம், "என் தந்தையின் சகோதரர்கள் இருவரிடமிருந்து இதை நான் செவியுற்றேன்; அவர்கள் இருவரும் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைத் தடுத்தார்கள் என்று அவர்கள் (என்) குடும்பத்தாருக்கு அறிவித்தனர்" என்று கூறினார்கள்.
அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், "இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நிலம் குத்தகைக்கு விடப்பட்டதை நான் நிச்சயமாக அறிவேன்" என்று கூறினார்கள். ஆயினும், "தனக்குத் தெரியாமல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதில் புதிதாக ஏதேனும் கட்டளையிட்டிருக்கக்கூடுமோ" என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அஞ்சினார்கள்; எனவே, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதைக் கைவிட்டார்கள்.