(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களுக்கருகில் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"சொர்க்கவாசிகளில் ஒருவர் அல்லாஹ்விடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு அல்லாஹ், 'நீ விரும்பியதெல்லாம் உனக்குக் கிடைக்கவில்லையா?' என்று கேட்பான். அதற்கு அவர், 'ஆம்! இருந்தாலும், நான் விவசாயம் செய்ய விரும்புகிறேன்' என்று கூறுவார்.
உடனே அவர் விதைகளைத் தூவுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அப்பயிர் முளைத்து, முதிர்ந்து, அறுவடை செய்யப்பட்டு, மலைகளைப் போன்று குவிந்துவிடும். அப்போது அல்லாஹ், 'ஆதமின் மகனே! இதை வைத்துக்கொள்; நிச்சயமாக உன்னை எதுவும் திருப்திப்படுத்தாது' என்று கூறுவான்".
இதைக் கேட்ட அந்த கிராமவாசி, "அல்லாஹ்வின் தூதரே (ஸல்)! நிச்சயமாக அந்த மனிதர் ஒரு குறைஷியாகவோ அல்லது ஒரு அன்சாரியாகவோதான் இருப்பார். ஏனெனில், அவர்கள்தாம் விவசாயம் செய்பவர்கள். நாங்கள் விவசாயம் செய்பவர்கள் அல்லர்" என்று கூறினார். இதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.