அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்ததாவது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "முஃமின்கள் நரகத்திலிருந்து காப்பற்றப்பட்டதும், அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். இவ்வுலகில் அவர்களுக்குள் நிகழ்ந்த அநீதிகளைப் பற்றி அவர்களிடம் விசாரணை செய்யப்படும். அவர்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, ஒழுங்குபடுத்தப்பட்டதும், சொர்க்கத்தில் நுழைவதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக, அவர்களில் ஒருவர் இவ்வுலகில் இருந்ததை விட தனது இருப்பிடத்தில் மிகச் சிறந்த வழிகாட்டுதல் பெற்றவராக இருப்பார்."