அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் பயணங்களின்போது அஷ்அரீ குலத்தினரிடம் உணவுப் பொருட்கள் குறைந்துவிடும்போதோ அல்லது மதீனாவில் அவர்களின் பிள்ளைகளுக்கு உணவு குறைந்துவிடும்போதோ, அவர்கள் தங்களிடம் உள்ள அனைத்தையும் ஒரு துணியில் சேகரித்து, பின்னர் ஒரே பாத்திரத்திலிருந்து சமமாகப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
وعن أبي موسى رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم : إن الأشعريين إذا أرملوا فى الغزو، أو قل طعام عيالهم بالمدينة جمعوا ما كان عندهم فى ثوب واحد، اقتسموه بينهم فى إناء واحد بالسوية فهم منى وأنا منهم” ((متفق عليه)) .
“أرملوا” فرغ زادهم أو قارب الفراغ.
அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், "அஷ்அரிய்யூன் கோத்திரத்தார் ஜிஹாதில் உணவுப் பற்றாக்குறையால் அவதியுறும் போதோ அல்லது அல்-மதீனாவில் உள்ள தங்கள் வீடுகளில் இருக்கும்போதோ, தங்களிடம் உள்ள அனைத்து உணவுப் பொருட்களையும் ஒரு துணியில் சேகரித்து, பின்னர் தங்களுக்குள் சமமாகப் பங்கிட்டுக் கொள்கிறார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நானும் அவர்களைச் சேர்ந்தவன்."